அமெரிக்காவில் கமலா ஹாரிஸின் பிரசாரத்தில் ஏ.ஆர்.ரகுமான்

#Election #America #President #AR_Rahman
Prasu
1 year ago
அமெரிக்காவில் கமலா ஹாரிஸின் பிரசாரத்தில் ஏ.ஆர்.ரகுமான்

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். 

அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என்று ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு கூறும்போது, அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை ஏ.ஆர். ரகுமானுடன், உலகத் தரம் வாய்ந்த நேரடி இசை நிகழ்ச்சியுடன் இணைந்து கொண்டாட உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சிக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதே போல் ஏ.ஆர்.ரகுமான் தரப்பிலும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

 இதற்கிடையே கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 30 நிமிட நிகழ்ச்சி வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4