கடுமையான நிதி சிக்கல்களுடன் போராடும் போயிங் விமானம் : ஊழியர்களை குறைக்க திட்டம்!
#SriLanka
#Workers
Dhushanthini K
6 months ago

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான போயிங்கின் அதிகாரிகள், அவர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கல்களைத் தீர்க்கும் பொருட்டு, அவர்களது பணியாளர்களில் 10 சதவீதத்தை குறைக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் நிறுவனத்தின் நிர்வாக நிலை அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள் உட்பட சுமார் 17,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பயனுள்ள ஜெட் விமானமாக கருதப்படும் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான 777X ஜெட் வெளியீட்டை ஒத்திவைக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனிடையே போயிங் நிறுவனத்தின் சந்தைப் பங்குகளும் 2.12 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.



