ஐ.நா பொதுச் செயலாளருக்கு தடை விதித்த இஸ்ரேல்

#UN #Israel #Banned #Chief
Prasu
1 year ago
ஐ.நா பொதுச் செயலாளருக்கு தடை விதித்த இஸ்ரேல்

இஸ்ரேல், காசா இடையிலான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். 

அவர்களை அழிக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் முக்கியத் தளபதி கொல்லப்பட்டனர். 

இதற்குப் பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்திருந்தது. இதற்கிடையே, நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் 200-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியது.

ஹைபர்சோனிக் வகை ஏவுகணை மூலம் இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாகஅவர் கூறியதாவது: இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர். இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. இதனை செய்யாமல் மவுனம் காக்கும் யாருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க தகுதி கிடையாது. 

ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி மற்றும் தற்போது ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவு கூரப்படுவார் என தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4