மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் : சீறி பாயும் ஏவுகணைகளால் அச்சத்தில் மக்கள்!

#SriLanka #War
Thamilini
1 year ago
மத்திய கிழக்கில்  அதிகரிக்கும் பதற்றம் : சீறி பாயும் ஏவுகணைகளால் அச்சத்தில் மக்கள்!

ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகளின் மூத்த தலைவர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றதால் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்ததாகவும், இது மத்திய கிழக்கில் கடுமையான போரின் முன்னறிவிப்புகளைக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் லெபனான் மற்றும் காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அடுத்த கட்ட நடவடிக்கை கடுமையாக இருக்கும் என ஈரான் அரசு இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

 இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள மூன்று இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அது வெற்றியடைந்ததாகவும் ஈரான் மேலும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4