ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து விசாரித்த இந்திய பிரதமர் மோடி

#India #PrimeMinister #rajini kanth #NarendraModi
Prasu
1 year ago
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து விசாரித்த இந்திய பிரதமர் மோடி

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவரது உடல்நலம் குறித்து கேட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவு அவரது அடிவயிறுபகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது.

அதேபோல பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருக்கும் காரணத்தால் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியானது. இந்த செய்தி பரவிய நிலையில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர், இது கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று அவரது மனைவி லதா விளக்கமளித்தார். இதையடுத்து நேற்று அப்போலோ மருத்துவமனை தரப்பில் வெளியிட்டஅறிக்கையில், "நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். 

அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார். இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கம், அறுவை சிகிச்சை இல்லாமல் Transcatheter முறையில் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்திடம் தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்துள்ளார். 

அவரிடம் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப விரும்புவதாகவும் மோடி தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4