சீனாவில் பல்பொருள் அங்காடியில் கத்திக் குத்து - 15 பேர் படுகாயம்!
#SriLanka
#China
Dhushanthini K
7 months ago

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்றிரவு (30) பதிவான சம்பவம் தொடர்பில் லின் என்ற 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சீன பொலிஸார் தெரிவித்தனர்.
கடுமையான நிதிப் பிரச்சினையை எதிர்நோக்கியிருந்த நபர், தனது கோபத்தை வெளிப்படுத்த இந்தக் குற்றத்தைச் செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் பல பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.
உயிரிழந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.



