கனடாவில் வேகமாக பரவும் ஆபத்தான பாக்டீரியா தொற்று
கால்கரி நகரில் வாழும் வீடில்லா மற்றும் நிலையற்ற குடியிருப்பில் உள்ள பெரியவர்கள் மத்தியில்,Haemophilus influenzae type b எனப்படும் அரிய பாக்டீரியா பரவி வருவதாக கனடாவின் அல்பேர்டா மாகாண சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“மரபணு ரீதியாக வேறுபட்ட ஒரு Hib வகை காரணமாக, ஆழமான தொற்றுகளின் ஒரு குழுமம் கண்டறியப்பட்டுள்ளது” என சுகாதார பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த Hib வகை இதற்கு முன் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பதிவாகியுள்ளது. தற்போது அது, வீடில்லாதவர்கள் அல்லது நிலையற்ற வீடுகளில் வாழும் பெரியவர்கள் மத்தியில் எங்கள் பிராந்தியத்திலும் காணப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு, வான்கூவர் தீவில் Hib பரவல் ஒன்று பதிவாகி, வீடில்லா மக்களும் போதைப்பொருள் பயன்படுத்துவோரும் அதனால் பாதிக்கப்பட்டனர்.
(வீடியோ இங்கே )