இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka
Thamilini
1 year ago
இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலான அறிவிப்பை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் கடந்த சில தினங்களில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட 107 வாகனங்கள் தற்காலிகமாக பொலிஸ் பாதுகாப்பில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், ஜனாதிபதி செயலகத்திற்குள் அதிக வாகனங்களை நிறுத்த முடியாத காரணத்தினால், ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே உள்ள வளாகத்திலேயே இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால் அது காட்சிப்படுத்துவதற்காகவே வைக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் வழமையான ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், முன்னாள் ஜனாதிபதியினால் அரசியலமைப்பின் 41(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட தனது தனிப்பட்ட ஊழியர்களுக்கு தமது பதவிக்காலத்தில் வழங்கப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4