எரிபொருளையும் பணத்தையும் சேமித்து வைத்து சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில்!

#SriLanka #Sri Lanka President #Fuel
Mayoorikka
10 months ago
எரிபொருளையும் பணத்தையும் சேமித்து வைத்து சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில்!

இந்த வருடத்தின் எதிர்வரும் காலப்பகுதிக்கு தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்திடம் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

 புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 வரவிருக்கும் காலத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணம் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

 அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படவில்லை எனவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!