யாழில் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவம் தொடர்பில் இளைஞர் கைது
                                                        #SriLanka
                                                        #Jaffna
                                                        #Election
                                                        #Arrest
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        1 year ago
                                    
                                 
                யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாக கிழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 குறித்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            