கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் 2 வருடங்களில் இஸ்ரேல் அழிந்துவிடும் - டிரம்ப்

#Election #America #Israel #President #Trump #KamalaHarris
Prasu
1 year ago
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் 2 வருடங்களில் இஸ்ரேல் அழிந்துவிடும் - டிரம்ப்

நவம்பர் 5 ஆம் தேதி அமரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை பிரச்சாரங்களில் இணையத்திலும் கடுமையாக விமர்சித்து வரும் டிரம்ப் உலக அரசியலில் அமெரிக்கா பின் தங்கியுள்ளதாகக் கூறி வருகிறார்.

இந்நிலையில் தான் இந்த தேர்தலில் தோற்றால் அதற்கு அமெரிக்க யூதர்கள் தான் பாதி காரணமாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். 

வாஷிங்டன் நகரில் நடந்த இஸ்ரேலிய அமெரிக்கர்கள் கவுன்சிலின் தேசிய மாநாட்டில் பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும். 

அதற்கு கமலாவுக்கு வாக்களித்த யூதர்களே பாதி காரணம். ஏனெனில் அவர்கள் எப்போதும் ஜனநாயகவாதிகளுக்கே வாக்களிப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால் கமலா யூதர்களை வெறுப்பவராக இருக்கிறார். 

அமெரிக்காவில் யூதர்களின் வாக்கு 40 சதவீதம் உள்ள நிலையில் நான் தோற்றால் அதற்கு பாதி காரணம் யூதர்கள்தான் என்று தெரிவித்த அவர் முந்தைய தேர்தல்களில் ஜனநாயகவாதிகளுக்கே யூதர்கள் அதிக வாக்களித்த புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டார்.

மேலும் சமீபத்தில் அமெரிக்க யூதர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு 65 சதவீத யூதர்களும் டிரம்புக்கு 34 சதவீத யூதர்களும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

பாலஸ்தீனம் மீது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுடன் நாளுக்கு நாள் பகையை வளர்த்து வருவதும் கவனிக்கத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4