ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தை நிறுத்திய தலிபான்கள்

#Afghanistan #Taliban #Polio
Prasu
1 year ago
ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தை நிறுத்திய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்திற்கான நோய்த்தடுப்பு பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பே தடைப் பற்றிய செய்தி ஐ.நா அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்திலிருந்து யாரும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் போலியோ எதிர்ப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்து வன்முறைகளால் அழிக்கப்பட்டுள்ளதுடன், பயங்கரவாதிகள் தடுப்பூசி குழுக்கள் மற்றும் அவர்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட காவல்துறையினரை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், அதுப்போன்ற பிரச்சாரங்கள் குழந்தைகளை கருத்தடை செய்வதற்கான மேற்கத்திய சதி என்று கூறப்படுகிறது.

 ஆபத்தான மற்றும் முடக்குவாத நோயான போலியோ பரவுதலை தடுக்க முடியாத இரண்டு நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றொன்று பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4