சீனாவை தாக்கிய பெபின்கா புயல் - விமான சேவை பாதிப்பு

#China #Flight #Strom #cancelled
Prasu
1 year ago
சீனாவை தாக்கிய பெபின்கா புயல் - விமான சேவை பாதிப்பு

சீனாவில் உருவான பெபின்கா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

அதன்படி ஷாங்காய் நகரில் புயல் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. அப்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் அந்த பகுதி வெள்ளக்காடாக மாறின. 

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் நகரில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே புயல் காரணமாக அங்கு மோசமான வானிலை நிலவியது. 

இதனால் சுமார் 100 விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டன. புயல் கரையை கடக்கும்வரை மேலும் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4