விண்வெளியில் இருந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சுனிதா வில்லியம்ஸ்

#America #NASA #astronaut
Prasu
1 year ago
விண்வெளியில் இருந்து பத்திரிகையாளர்களிடம்  பேசிய சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். 

அவர்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.

விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டது. இதனால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தபடி இருவரும் நேரடியாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது பேசிய சுனிதா வில்லியம்ஸ், "விண்வெளி மையத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

 அனைத்துக்கும் தயாராகவே வந்திருக்கிறேன். அதிபர் தேர்தலில் வாக்களிப்பது குடிமக்களாகிய நமக்கு ஒரு மிக முக்கியமான கடமையாகும். மேலும் விண்வெளியில் இருந்து வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4