சாதனை மேல் சாதனை படைக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ

#Social Media #Cristiano Ronaldo #Youtube #Youtuber #Record
Prasu
10 months ago
சாதனை மேல் சாதனை படைக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ

பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டொ (39), போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வந்தார். 

தற்போது அவர் சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து அரங்கில் அதிகாரப்பூர்வமாக 900 கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

சமூக வலைதளங்களில் அதிகம் ரசிகர்களைக் கொண்டுள்ள விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதள பக்கத்திலும் கணக்கு வைத்துள்ள ரொனால்டோ, அண்மையில், UR. Cristiano எனும் யூடியூப் சேனலை தொடங்கினார். 

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து வினாடிக்கு வினாடி சப்ஸ்கிரைபர்கள் அதிகரித்து வருகின்றனர். ஒரு வாரத்திற்குள் அவரை 5 கோடி பேர் பாலோ செய்கின்றனர்.

இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில் சேர்ந்து 100 கோடி பாலோயர்ஸ் கொண்ட முதல் நபர் என்ற பெருமையை கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.

யூடியூபில் 5 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் சுமார் 64 கோடி பேரும், பேஸ்புக்கில் 17 கோடி பேரும், எக்ஸ் தளத்தில் சுமார் 11.3 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.

 இதைக் கொண்டாடும் விதமாக போர்ச்சுக்கல் கால்பந்து அணி புதிய போஸ்டரை வெளியிட்டது. ரசிகர்கள் இதனை உற்சாகமாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!