வாக்களிப்பது எவ்வாறு: மக்களை விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரம் வெளியீடு..!

#SriLanka #Election #Vote
Mayoorikka
3 weeks ago
வாக்களிப்பது எவ்வாறு: மக்களை விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரம் வெளியீடு..!

துண்டுப் பிரசுரம் வெளியிடும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.சீ .அமல்ராஜ் வெளியிட்டு வைக்க, முதலாவது துண்டுப் பிரசுரத்தை கிளிநொச்சி மாவட்ட செயலாளர் எஸ்.முரளீதரன் பெற்றுக் கொண்டார்.

 குறித்த துண்டுப் பிரசுரமானது மக்கள் சரியான முறையில் வாக்களிப்பது தொடர்பான தெளிவூட்டல் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 குறித்த துண்டுப்பிரசுரமானது உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமசேவையாளர்கள் மூலம் கிராம மக்களுக்கு வழங்கி வாக்களிப்பு முறை தொடர்பாக தெளிவூட்டப்படவுள்ளது.

 துண்டுப் பிரசுரம் வெளியீட்டைத் தொடர்ந்து மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் தெளிவூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!