வரலாற்றில் இடம் பிடித்த ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து டெஸ்ட் போட்டி

#Afghanistan #Newzealand #Test #Cricket
Prasu
3 weeks ago
வரலாற்றில் இடம் பிடித்த ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து டெஸ்ட் போட்டி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்திய மைதானங்களை அவர்களுடைய சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது. 

ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடத்த இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் முடிவு செய்தன. அதன்படி இந்தியாவின் டெல்லி அருகில் உள்ள கிரேட் நொய்டாவில் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 9ந்தேதி போட்டி தொடங்குவதாக இருந்தது. ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக கிரேட் நொய்டா மைதானத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

மழை நீர் வெளியேறுவதற்கு வழியில்லாததால் முதல் நாள், இரண்டாவது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. எப்படியாவது போட்டியை நடத்திவிட வேண்டும் என்ற முனைவில் மின் விசிறி கொண்டெல்லாம் ஆடுகளத்தை சூடுபடுத்தினர்.

இருந்தபோதிலும் ஆடுகளம் மற்றும் அவுட் பீல்டு மோசமாக இருந்ததாலும், தொடரந்து மழை பெய்ததாலும் 3வது மற்றும் நாளாவது ஆட்டங்கள் ரத்து செய்ப்பட்ட நிலையில், இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஐந்து நாட்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது. போர் போன்ற அசாதாரண சூழ்நிலை அல்லது பெருந்தொற்று போன்ற இக்கட்டான நிலையில்தான் ஐந்து நாட்கள் ஆட்டமும் கைவிடப்படும் நிலை ஏற்படும். 

ஆனால் மழையால் ஒரு டெஸ்ட் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது. மேலும். இதுபோன்று ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்படும் 8வது போட்டி இதுவாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!