மணிகண்டன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த நடிகர் ஜீவா
                                                        #Police
                                                        #Accident
                                                        #Actor
                                                        #TamilCinema
                                                        #Case
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        1 year ago
                                    
                                தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் காரில் வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு சுவரில் மோதி நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், நடிகர் ஜீவா உள்பட அவரது குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், காரின் முன்பகுதி பயங்கரமாக சேதமடைந்தது.
இந்நிலையில், சாலை விபத்தில் சிக்கியது தொடர்பாக நடிகர் ஜீவா சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விபத்திற்கு காரணமான இரு சக்கர வாகன ஓட்டி மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்துள்ளார்.