உக்ரைனுக்கு மேலும் $700 மில்லியன் நிதியுதவியை அறிவித்த அமெரிக்கா

#America #Ukraine #Aid
Prasu
1 year ago
உக்ரைனுக்கு மேலும் $700 மில்லியன் நிதியுதவியை அறிவித்த அமெரிக்கா

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை நிறுத்த அமெரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

ஆனாலும் ரஷியாவுக்கு எதிராகப் போராடி வரும் உக்ரைன் அரசுக்கு அவ்வப்போது அமெரிக்கா நிதியுதவி செய்துவருகிறது.

இதற்கிடையே, இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என அதிபர் புதின் தெரிவித்தார். 

இதே கருத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் சென்றுள்ளார். அவர் கீவ் நகரில் அமைச்சர்கள், அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.

 அப்போது, மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4