சுவிஸில் இலவசமாக முடக்குவாதம் தொடர்பில் தகவல் வழங்கும் நிகழ்வு!

#SriLanka #Switzerland
Mayoorikka
3 weeks ago
சுவிஸில் இலவசமாக முடக்குவாதம் தொடர்பில்  தகவல் வழங்கும் நிகழ்வு!

முடக்கு வாதம் (Rheumatoid arthritis) என்பது நாள்பட்ட, உள்பரவிய அழற்சியினை உருவாக்கும் ஓர் உடல்நலச் சீர்கேடாகும். இந்நோயுடன் வாழ்க்கைத் தரம் குறையாமல் வாழ வழிசொல்லும் தகவல் நிகழ்வு எதிர்வரும் 14. 09. 2024 சனிக்கிழமை 17.00 மணிமுதல் Europapaltz 1B, 3008 Bern ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மேல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

 நலவாழ்வுத் தகவல்களை விளக்கத்துடன் மருத்துவர் இராஜ்மேனன் இராஜசேகரன் (Dr. Rajmenan Rajasekaran) தமிழில் வழங்குவார். 

 பேர்ன் மற்றும் வலே மாநில முடக்குவாத நோய்த்தடுப்புக் கூட்டிணைவின் முன்னேற்பாட்டில், PHS Public Health Services நெறிப்படுத்தலில், சைவநெறிக்கூடத்தின் இசைவுடன் இத் தகவல் நிகழ்வு நடைபெறுகின்றது.

 தமிழில் உரிய மருத்துவத் தகவல்களைப் பெற்றுப் பயன் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நிகழ்விற்கு நுழைவுக் கட்டணம் இல்லை (இலவசம்)

 தொடர்புகளுக்கு 

 031 302 09 56 / 078 697 70 25

images/content-image/2024/09/1726156230.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!