ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
6 months ago

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெலிமடை திரையரங்கில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் பிரசாரக் கூட்டத்திற்கு விளையாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



