லண்டன் ஶ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட சிறீதரன் எம்பி!

#SriLanka #London #sritharan
Mayoorikka
1 week ago
லண்டன் ஶ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட சிறீதரன் எம்பி!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் லண்டனிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இன்றைய தினம் லண்டன் ஶ்ரீ கனக் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தார்.

 அங்கு விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்ததுடன், கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

images/content-image/2024/09/1725442477.jpg

 இந்தக் கலந்துரையாடலின் போது தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் பேசப்பட்டிருந்தது.

images/content-image/2024/09/1725442494.jpg

லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பில் தாயகத்தில் வாழும் வறிய மக்களுக்கு பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 இதேவேளை லண்டன் சென்றிருக்கும் சிறிதரன் பிரித்தானிய அரசியல் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2024/08/1725447900.jpg

images/content-image/2024/08/1725447916.jpg