வவுனியா சஜித்தின் பிரச்சார கூட்டத்தில் தண்ணீர் போத்தலால் குழப்பம்: ஊடகவியலாளர்களுடனும் முரன்பாடு

#SriLanka #Vavuniya
Mayoorikka
10 months ago
வவுனியா சஜித்தின் பிரச்சார கூட்டத்தில் தண்ணீர் போத்தலால்  குழப்பம்: ஊடகவியலாளர்களுடனும் முரன்பாடு

வவுனியாவில் நேற்றைய தினம்(03/09) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் பிரச்சார கூட்டம் இடம்பெற்றது இதன்போது அங்கு முன்னால் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களுக்கு ஆதரவாக வந்திருந்த பொதுமக்கள் சிலருக்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கப்படவில்லை என்றும் அழைத்து வந்தவர்கள் தமக்கு அழைத்துவரும்போது தண்ணீர் போத்தல்கள் தரமால் விடுத்து இங்கு வந்து இனம் சார்ந்து செயல்படுகிறார்கள் என குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.

 இதேவேளை குறித்த முரண்பாட்டை காணொளியாக்கிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை அதனை எடுக்க வேண்டாம் என்று சிலர் தடுத்து இருந்ததுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னார் முன்னால் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் தொடர்பாக பிரசுரிக்பப்பட்ட செய்தியை உதாரணம் காட்டி குறித்த செய்தியை ஏன் பிரசுரித்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பி ஊடகவியலாளர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

images/content-image/2024/09/1725427005.jpg

 இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட பிரதான அமைப்பாளர் திருமதி ரசிக்கா அவர்கள் தலையிட்டு நிலைமையை சுமுகமாக்கி இருந்தார்.

 ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதிதுத்துவபடுத்தும் ஆடைகளை அணிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!