மெக்சிகோவில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஒன்றுக்கூடிய மக்கள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
மெக்சிகோவில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஒன்றுக்கூடிய மக்கள்!

மெக்சிகோவில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட "பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச தினத்துடன்" இணைந்து நடத்தப்பட்ட போராட்டம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 மெக்சிகோவில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தலைநகர் மெக்சிகோ நகரில் போராட்டம் நடத்தப்பட்டது. 

காணாமல் போன தமது உறவினர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

காணாமல் போனவர்களின் படங்களுடன் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருந்தனர். 

மெக்ஸிகோவின் உத்தியோகபூர்வ தரவு அறிக்கைகளின்படி, மெக்ஸிகோவில் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் பேர் பலவந்தமாக காணாமல் போயுள்ளனர். 

போதைப்பொருள் கடத்தல் பரவத் தொடங்கிய 2006ஆம் ஆண்டிலிருந்து அதிகளவான காணாமற்போனோர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4