அவுஸ்ரேலியாவில் சிக்கியுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தீர்வை வழங்குமாறு கோரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
அவுஸ்ரேலியாவில் சிக்கியுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தீர்வை வழங்குமாறு கோரிக்கை!

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை முன்வைத்து இதுவரை தீர்வு கிடைக்காத மக்களுக்கான உடன் தீர்வை வழங்குமாறு கிராஸ்பெஞ்ச் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பிரதமர் அன்டனி அல்பனீஸிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

விசா பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர உரிமைய வழங்குமாறு கோரி 25 கூட்டரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரதமர் மற்றும் குடிவரவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.  

மெல்பேர்னில் வசித்த இலங்கை இளைஞரான மனோ யோகலிங்கம் கடந்த புதன்கிழமை விசா பிரச்சினை காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதன் பின்னரே அவர்கள் பிரதமருக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியதற்கு முக்கியக் காரணமாகியுள்ளது. 

இந்தச் சம்பவத்துடன், இன்னும் விசாவுக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்குவதற்கு பொருத்தமான வழியை உருவாக்குமாறு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் குடிவரவு அமைச்சர் டோனி பர்க் ஆகியோரை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

 பிரச்சினைகளை எதிர்நோக்கும் 8,500 அகதிகளுக்கு நிரந்தர வதிவிடமோ அல்லது மறு புகலிட விண்ணப்ப நடைமுறையோ வழங்கப்பட வேண்டுமென இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

 அரசின் வழிமுறைகளால் இன்னொரு உயிரை இழக்க வேண்டிய அவசியம் இல்லை என வலியுறுத்தியுள்ளனர். கடந்த வருடம் 19,000 அகதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதைப் போன்று இந்த அகதிகளுக்கும் நிரந்தர வதிவிட உரிமை அனுமதிப்பதே சிறந்த வழி என ஆணையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4