இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலி

#Death #Indonesia #Flood
Prasu
1 year ago
இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலி

இந்தோனேசியாவில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. 

லட்சக்கணக்கானோர் மலைப் பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் வசித்து வருவதால் பேரிடர் காலங்களில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் அதிகமாக உள்ளது.

இதற்கிடையே, இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணம், டெர்னேட் தீவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

 ருவா கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் அடித்துச் சென்றதுடன், பிரதான சாலை மற்றும் அந்த கிராமத்திற்கான தரைவழி தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேற்றில் புதைந்தன. இந்நிலையில், இந்தோனேசியா கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக பலியாகினர் என்றும், மாயமான பலரை மீட்புக் குழு தேடி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4