வாழை திரைப்படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்
#TamilCinema
#Movie
#Kollywood
Prasu
1 year ago

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் வாழை படத்தை பாராட்டி இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "நம் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக எடுக்கும் போது நாம் வாழ்ந்த தருணங்கள் மீண்டும் கண் முன் வந்து போகும். வலி நிறைந்த ஒரு தருணத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் கலையாக படைத்து நெஞ்சத்தை கலங்க வைத்து விட்டார். ! All the love to you brother" என்று பதிவிட்டுள்ளார்.



