மழையுடான வானிலையில் மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!
#SriLanka
#srilankan politics
Thamilini
2 years ago
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, தற்போதுள்ள மழை நிலைமைகள் இன்று (22.08) முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றானது மணிக்கு 30-40 கி.மீற்றர் வரை வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே