ஆண்டுக்கு 4 படங்கள் - நடிகர் பிரசாந்த்
#Actor
#TamilCinema
#Kollywood
Prasu
1 year ago
தமிழ்த் திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த பிரசாந்த், நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அந்தகன்’.
இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், அடுத்தகட்ட நகர்வு குறித்து நடிகர் பிரசாந்த் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஆண்டுக்கு 4 படங்கள் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளேன்.
குறிப்பிட்ட இயக்குநர்களுடன் என்றில்லை, அனைத்து இயக்குநர்களுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என தெரிவித்தார்.