இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
8 months ago

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள மத மையத்திற்கு அருகே நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் ஆயுதக் குழுக்கள் பொறுப்பேற்றுள்ளன.
இஸ்ரேலிய பொலிஸாரும், ஷின் பெட் உளவுத்துறையும் இதனை பயங்கரவாத தாக்குதல் என அறிமுகப்படுத்தியுள்ளனர். வெடிகுண்டு வைத்திருந்த நபர் கொல்லப்பட்டதுடன் அருகில் இருந்த ஒருவர் காயமடைந்தார்.
டெல் அவிவ் இஸ்ரேலின் வர்த்தக தலைநகரமாக கருதப்படுகிறது.
மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிக்கு அந்த நபர் வெடிகுண்டை எடுத்துச் சென்றபோது வெடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.



