ஜோதிகாவின் ஆடை விவகாரம் : குடும்பத்தினர் விடுத்துள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நடிகை ஜோதிகா விருது நிகழ்வு ஒன்றிற்கு மாடர்ன் உடை அணிந்து வந்தது பேச்சுப் பொருளாக இருந்து வருவதுடன், புகைப்படமும் வைரலாகி வருகின்றது.
தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ள நடிகை ஜோதிக பிலிம்பேர் விருது நிகழ்விற்கு உள்ளாடை தெரியும் வகையில் உடை அணிந்து வந்தததாக விமர்சனங்கள் எழுந்தன.
பலர் நடிகர் சிவகுமாரின் வீட்டில் இருந்து வரும் ஒரு பெண் இவ்வாறு உடையணிவது குறித்து மோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோதிகாவின் குடும்பத்தினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஆபசமான கருத்துக்களை வைக்கும் நபர்கள் மற்றும் ஊடகங்களுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.



