இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவரப்பட்ட யானையை கருணைக்கொலை செய்ய முடிவு

#Switzerland #Elephant #Euthanasia #SriLankan
Prasu
1 year ago
இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவரப்பட்ட யானையை கருணைக்கொலை செய்ய முடிவு

பல ஆண்டுகளுக்குமுன் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவரப்பட்ட யானை ஒன்றைக் கருணைக்கொலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பறந்தது Ceyla-Himali என்னும் பெண் யானை.

அப்போது அவளுக்கு ஒரு வயது கூட ஆகவில்லை. சுவிட்சர்லாந்தில் சூரிச்சில் ஒரு விலங்கியல் பூங்காவில் வாழ்ந்துவந்த Ceyla-Himali, ஆறு குட்டிகளை ஈன்று, பல குட்டி யானைகளை வளர்க்கவும் உதவினாள்.

ஆனால், Ceyla-Himaliயால் இப்போது சரியகாக நிற்கக்கூட முடியவில்லை. அவளுக்கு ஜூலை மாதம் 1ஆம் திகதி 49ஆவது வயது பிறந்தது. வயதானதால் பல பிரச்சினைகள் ஏற்பட்டதுடன், Ceyla-Himaliயின் சிறுநீரகங்களும் சரியாக இயங்கவில்லை. 

அவளால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. ஆகவே, Ceyla-Himaliயின் உடல் நிலையை ஆராய்ந்த மருத்துவர்கள், அவளது நலன் கருதி அவளை கருணைக்கொலை செய்வதென நேற்று முடிவு செய்துள்ளார்கள்.

இப்போது சூரிச் விலங்கியல் பூங்காவில் Ceyla-Himaliயின் இரண்டு மகள்களான Panang (35)ம் Farha (19ம், Thai என்னும் ஆண் யானையுடன் வாழ்ந்துவருகிறார்கள்.

 Ceyla-Himali உயிரிழந்த நிலையில், அவர்கள் விரைவில் குட்டிகளை ஈன்றெடுப்பார்கள் என சூரிச் விலங்கியல் பூங்கா அதிகாரிகள் நம்புகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4