நடிகர் சூரியின் கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
#TamilCinema
#release
#trailer
#Movie
#Kollywood
Prasu
1 year ago
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது.
இதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.
சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.