முத்தமிழின் மகன் ஸ்டாலின் மாநாடுக்கு வரும்போது விபூதி பூசுவாரா? ராஜா கேள்வி

#India #government #M.K.Stalin
Prasu
1 year ago
முத்தமிழின் மகன் ஸ்டாலின் மாநாடுக்கு வரும்போது விபூதி பூசுவாரா? ராஜா கேள்வி

அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து, திருநீரு பூசிய பிறகே மாநாட்டில் பங்கு பெற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு இஸ்லாமிய அமைப்புகளே வரவேற்பு தெரிவித்துள்ளன.

ஒரு தனிநபரின் சொத்துக்களை வக்பு வாரியம் தன்னுடையது என்று அறிவித்துக் கொண்டால் அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு கூட செல்ல முடியாத நிலை தற்பொழுது உள்ளது. மேலும் வக்பு வாரியத்தில் இருந்து தடையில்லா சான்று பெற்றாலே பொதுமக்கள் தங்களுடைய சொத்துக்களை விற்க முடியும் என்ற நிலை உள்ளது. 

இது கொலை செய்தவனிடமே ஞாயம் கேட்பது போன்றது. எனவே புதிய வக்புவாரிய திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், வக்புவாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த விவகாரங்களில், ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு எடுக்கலாம். 

இஸ்ரேல் - ஹமாஸ் தொடர்பான பிரச்சனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் பங்களாதேஷில் நடைபெறும் கலவரத்தில், அங்கு சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்கள் மீதும், அவர்களது வணிக நிறுவனங்கள், வீடுகள், கோவில்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்கள் குறித்து ஏன் கருத்தோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை?

கருணாநிதி எப்படி கடைசிவரை ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்காமல் இருந்தாரோ அதுபோலவே ஸ்டாலினும் நினைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

 முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிறுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு பழனியில் தடை விதித்தால் தடையை மீறி விழா நடக்கும் என்று எச். ராஜா தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4