கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு விளக்கமறியல் நீட்டிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளின் போது மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (08.08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே