மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் புதிய திட்டம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்காக மக்கள் துறையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு இயக்கத்தை மக்கள் துறையின் சாரதியாக மாற்றும் வகையில் நாட்டில் சுதந்திரமான வலுவான கூட்டுறவு இயக்கம் கட்டியெழுப்பப்பட்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற கூட்டுறவு இயக்கத்தின் எதிர்காலப் போக்கு குறித்து கலந்துரையாடும் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே