பரிசில் இருந்து பயணிக்கும் விமானங்கள் அனைத்தும் இரத்து!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பரிசில் இருந்து லெபனான் தலைநகருக்கு பயணிக்கும் விமானங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக இந்த விமான சேவைகள் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நேற்று (06.08) நண்பகல் முதல் - வியாழக்கிழமை காலை வரை விமானங்கள் இரத்துச் செய்யப்படுவதாகவும், மறு அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Air France மற்றும் Transavia France ஆகிய விமான நிறுவனங்கள் லெபனானுக்கு விமான சேவைகள் பரிஸ் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து இயக்கி வருகிறது. அவ்விரண்டு சேவைகளுமே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.