பிஜி நாட்டின் உயரிய விருதை பெற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு

#India #President #Award #Fiji
Prasu
1 year ago
பிஜி நாட்டின் உயரிய விருதை பெற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார். 

அதன்படி, நேற்று தெற்கு பசிபிக் தீவு நாடான பிஜி நாட்டுக்கு திரவுபதி முர்மு சென்றடைந்தார்.விமான நிலையத்தில் திரவுபதி முர்முவை பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா வரவேற்று சம்பிரதாய வரவேற்பு அளித்தார்.

இந்த பயணத்தின் முக்கியத்துவமான பிஜி நாட்டு அதிபர் கட்டோனிவேர் மற்றும் பிரதமர் சிதிவேன் ரபுகாவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்பட்டது.

இதனிடையே, பிஜியின் அதிபர் கட்டோனிவேர் மற்றும் துணை அதிபர் ஆகியோர் திரவுபதி முர்வுமுக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'சிவிலியன்' விருதை வழங்கினர்.

 பிஜிக்கு சென்றுள்ள முதல் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிஜி பயணத்தைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!