பொதுஜன பெரமுன கட்சி வாய்ப்பு வழங்கினால் போட்டியிட தயார்! தமிக்க

#SriLanka #Election #SLPP
Mayoorikka
11 months ago
பொதுஜன பெரமுன கட்சி  வாய்ப்பு வழங்கினால் போட்டியிட தயார்! தமிக்க

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வாய்ப்பு வழங்கினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் எனவும் அது சாத்தியமில்லை என்றால் தன்னைப் போன்ற ஒருவர் ஏன் போட்டியிட வேண்டும் எனவும் கேள்வியெழுப்பிருந்தார். இதேவேளை, இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 இதற்காக தற்போது கட்டுப்பணம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரம் 15ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கள் உள்ளிட்டவர்கள் கட்டுப்பணம்செலுத்தியுள்ளதுடன், தேர்தலில் போட்டியிட உள்ளதாக 10க்கும் மேற்பட்டவர்கள் அறிவித்துள்ளனர்.

 இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று தீர்மானிக்கும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!