தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க திறைசேரி தயாராகவுள்ளது! நிதியமைச்சு

#SriLanka #Election
Mayoorikka
1 year ago
தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க திறைசேரி தயாராகவுள்ளது! நிதியமைச்சு

தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்க திறைசேரி தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

 கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் தேர்தல் செலவுகளுக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பணப்புழக்கத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் நிதியை வழங்க ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்குச்சீட்டு அச்சிடுதல், பாதுகாப்பு, எரிபொருள் மற்றும் வாக்குப் பெட்டிகள் போன்ற அவசர தேவைகளுக்காக 80 கோடி ரூபாய் செலவாகும் என தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மதிப்பிட்டுள்ள நிலையில், அதனை வழங்க திறைசேரி தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!