சுவிஸில் ATM இயந்திரத்திற்கு வெடி வைத்து பணம் கொள்ளை
#Switzerland
#Robbery
#money
#Bomb
Prasu
1 year ago

சுவிஸ் மாகாணமான Vaudல் அமைந்துள்ள ஒரு ATM இயந்திரத்தை வெடிவைத்து தகர்த்து கொள்ளையர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த வெடி வெடித்ததில் அந்த முழு கட்டிடமும் சேதமடைந்துவிட்டது.
இருந்தாலும், அந்தக் கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்துடன் தப்பித்து சென்றுவிட்டார்கள்.
இதுவரை அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எவ்வளவு பணம் கொள்ளை போனது என்பதும் இதுவரை தெரியவரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக ATM இயந்திரங்களுக்கு வெடிவைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
2022இல் மட்டுமே, இதுபோல 52 கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இம்மாதம், அதாவது, ஜூலை 4ஆம் திகதி கூட Vaud மாகாணத்தில் இதேபோல ஒரு கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.



