டொனால்ட் ட்ரம்பிற்கு தேர்தலுக்காக நன்கொடை வழங்கவுள்ள எலான் மஸ்க்

#Election #America #ElonMusk #President #donation #Trump
Prasu
2 years ago
டொனால்ட் ட்ரம்பிற்கு தேர்தலுக்காக நன்கொடை வழங்கவுள்ள எலான் மஸ்க்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு தேர்தல் நிதியாக 45 மில்லியன் டொலர் எலான் மஸ்க் வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக் அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்கவுள்ளதாக முதலில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் மறைமுகமாக ட்ரம்புக்கு ஆதராவாக அமெரிக்க தொழிலதிபர்களுடன் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சனிக்கிழமை ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுட்டுக்கு பிறகு வெளிப்படையாக மஸ்க் ஆரதவை அறிவித்தார்.

இந்த நிலையில் ட்ரம்புக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் சூப்பர் பிஏசி நிறுவனத்திடம் 45 மில்லியன் டொலர் நிதி வழங்க உறுதி அளித்துள்ளதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜனரல்’ திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் மற்றொரு அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி தொழிலதிபர்கள் ஷான் மாகுவோர், ஜான் ஹெரிங் ஆகியோர் தலா 5 லட்சம் டொலர்கள், கேமரூன் மற்றும் டைலர் விங்க்லெவோஸ் தலா 2.5 லட்டம் டொலர்கள் நன்கொடை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4