டிரம்புக்கு டெல்லியில் நடைபெற்ற யாகம் வளர்த்து சிறப்பு பூஜை வழிபாடு

#Delhi #God #GunShoot #Trump
Prasu
1 year ago
டிரம்புக்கு டெல்லியில் நடைபெற்ற யாகம் வளர்த்து சிறப்பு பூஜை வழிபாடு

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

அதிபர் தேர்தலை ஒட்டி அந்நாட்டு தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இரு வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சியை தொடர்ந்து, டெல்லியின் இந்து சேனா அமைப்பினர் அவரது நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக 'சிறப்பு ஹோமம்' நடத்தினர்.

டெல்லியில் உள்ள தில்ஷத் கார்டனில் உள்ள மா பக்லமுகி சாந்தி பீடத்தில், 1.25 லட்சம் புனித மஹாமிருத்யுஞ்சய் மந்திரத்தை உச்சரிக்கும் மகாமிருத்யுஞ்சய் ஜப ஹோம யாகத்தை பூசாரிகள் நடத்தி உள்ளனர். 

இந்த மந்திரம் நோயை குணப்படுத்தி, தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கும் பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4