சமூக வலைத்தளத்தில் விவகாரத்தை அறிவித்த துபாய் இளவரசி

#Instagram #Social Media # divorce #Dubai #Princess
Prasu
1 year ago
சமூக வலைத்தளத்தில் விவகாரத்தை அறிவித்த துபாய் இளவரசி

துபாய் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

தம்பதிகள் தங்கள் முதல் குழந்தையை வரவேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

 விவாகரத்து குறித்து ஷைக்கா மஹ்ரா தனது இன்ஸ்டாரகிராம் பக்கத்தில், "அன்புள்ள கணவரே.. உங்களுக்கு வேறொரு துணை கிடைத்துவிட்டதால், நம் விவாகரத்தை நான் இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி." என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதையும், அவர்களின் சுயவிவரங்களிலிருந்து ஒருவருக்கொருவர் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியும் உள்ளனர். 

"இது ஒரு மோசமான செய்தி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்" என்று ஒரு பயனர் பதிவின் கீழ் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், "உங்களின் முடிவுக்காக பெருமைப்படுகிறேன்" என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4