பயிற்சியில் ஈடுபட்ட கம்போடியா ராணுவ ஹெலிகாப்டர் மாயம்

#Cambodia #Missile #Helicopter #Military
Prasu
1 year ago
பயிற்சியில் ஈடுபட்ட கம்போடியா ராணுவ ஹெலிகாப்டர் மாயம்

கம்போடியா நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. ஹெலிகாப்டரில் 2 வீரர்கள் பயணித்தனர்.

அந்நாட்டின் பர்சட் , ஹட் காங் மாகாணங்களுக்கு இடையே அமைந்துள்ள கர்டமன் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால், 2 வீரர்களுடன் மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4