கொலன்னாவ துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கொலன்னாவ துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்!

கொலன்னா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அப்டன் தோட்டத்தின் உரிமையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீட்டில் இருந்த நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 61 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இறந்தவர் மற்றும் அவரது மனைவி வீட்டில் தங்கியிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்து இறந்தவர் வீட்டில் இருக்கிறாரா என்று மனைவியிடம் கேட்டனர். 

வீட்டில் இருந்து வெளியே வந்த போது குறித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!