இந்திய பாப் பாடகி உஷா உதுப்பின் கணவர் காலமானார்

#India #Cinema #Death #Actor #husband #Singer
Prasu
1 year ago
இந்திய பாப் பாடகி உஷா உதுப்பின் கணவர் காலமானார்

இந்திய பாப் ஐகான் உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் கொல்கத்தாவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

78 வயதான ஜானி சாக்கோ வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்த போது திடீரென வியர்ப்பது போலவும், அசோகரியாக இருப்பதாக கூறியதை அடுத்து குடும்பத்தினர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உஷா உதுப்பின் இரண்டாவது கணவர் ஜானி சாக்கோ 1946ம் ஆண்டு பிறந்தார். கோட்டயத்தைச் சேர்ந்த மணற்காடு பைனும்கல் குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஆவார். 

இவர், தேயிலை தோட்டத் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். உஷா உதுப் மற்றும் ஜானி சாக்கோ இருவரும் சந்தித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

 ஜானி சாக்கோவிற்கு முன்பாகவே உஷா உதுப்பிற்கு ராமு என்பவரை திருமணம் நடந்த நிலையில் அவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து , ஜானி சாக்கோவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!