தமிழர் பகுதியில் நிகழ்ந்த அதிசயம் : கண்ணை திறந்த அம்மன் சிலை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

தமிழர் பகுதியில் அம்மன் சிலை தனது ஒற்றை கண்ணை திறந்த அதிசய சம்பவம் பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு - முள்ளியவளை, கணுக்கேணி பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார் ஆலயத்திலுள்ள அம்மன் சிலையானது வழமையாக மூடிய நிலையிலுள்ள கண்களையுடைய சிலையாகவே காணப்பட்டு வந்தது.
நேற்றையதினமும் பக்தர்கள் சென்று வழிபட்டு வந்திருந்தனர். இந்நிலையில் இன்றையதினம் காலை திடீரென அந்த சிலையிலுள்ள ஒரு கண் திறந்த நிலையிலும், மற்றைய கண் மூடிய நிலையிலும் மனித கண்களை ஒத்த நிலையில் காணப்படுகின்றது.
இதனை பிரதேசவாசிகள் அதிசயத்துடனும், பக்தி பரவசத்துடனும் பார்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



