சுவிட்சர்லாந்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறவுள்ள ஷாருக்கான்

#Switzerland #Actor #Award #Movies
Prasu
1 year ago
சுவிட்சர்லாந்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறவுள்ள ஷாருக்கான்

சுவிட்சர்லாந்தில் 77வது லோகார்னோ திரைப்பட விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ம்தேதி முதல் 17-ம்தேதி வரை நடக்கிறது. 

இந்த விழாவில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவரவிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 58 வயதாகும் ஷாருக்கான் இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். பாசிகர், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன. 

தி பாந்தன், டான் 2. ஓம் சாந்தி ஓம் படங்களின் வெற்றியால் அவரது ரசிகர்கள் 'கிங் கான்' என்று அழைத்தனர்.

2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஷாருக்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான், ஜவான் படங்களும் பெரிய வெற்றி பெற்றன. 

இரண்டு திரைப்படங்களும் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் ஷாருக்கானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் பெருமை மிகு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!