யட்டியாந்தோட்டை பகுதியில் அதிகாலையில் நடந்த பயங்கரம் : இருவர் உயிரிழப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
யட்டியாந்தோட்டை பகுதியில் அதிகாலையில் நடந்த  பயங்கரம் : இருவர் உயிரிழப்பு!

யட்டியாந்தோட்டை, பலல்லேகம பிரதேசத்தில் தோட்ட வீடுகள் வரிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  

இன்று (03) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முதலாம் தோட்ட வீட்டில் தங்கியிருந்த 60 வயதுடைய ஆணும் 50 வயதுடைய பெண்ணும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

தீ விபத்தில் 03 தோட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தீவிபத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!